வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இன்று ஓய்வூதியதாரர்கள் குறைதீர் முகாம்

சேலம், ஏப். 15:சேலம் பிராந்திய வருங்கால வைப்புநிதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டியில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி ஆணைய பிராந்திய அலுவலகத்தில், ஏப்ரல் மாதத்திற்கான பென்ஷன் குறை தீர்ப்பு முகாம் இன்று (15ம் தேதி) காலை 11 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மண்டல ஆணையாளர் ஹிமான்ஷூ குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ், ஓய்வூதியம் தொடர்பான கேள்விகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வு பெறவிருக்கும் உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கலந்த கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

மேலும், தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வூதியம் பெற வேண்டிய வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், குறைகளின் விவரங்கள் ஏதேனும் இருந்தால் பிபிஓ எண், யூஏஎன் எண், ஸ்தாபனத்தின் பெயர், மொபைல் எண் ஆகியவற்றுடன் முன்கூட்டியே, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அலுவலருக்கு ro.salem@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது குறைகளை அனுப்பலாம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>