நண்பர்களுடன் குளித்தபோது சோகம் மருத்துவ கல்லூரி மாணவர் காவிரியில் மூழ்கி சாவு

மேட்டூர், ஏப்.15: சேலம் மாவட்டம், மேட்டூர் ஆர்.இ . குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தரராஜன். மின்வாரியத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஹரிஹரன்(19), பெரம்பலூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று தனது நண்பர்கள் 3 பேருடன், கொளத்தூர் அருகே உள்ள விராலிகாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு காவிரியில் நண்பர்களுடன் குளித்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு ஹரிஹரன் சென்றுவிட்டார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தத்தளித்தார். நண்பர்கள் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் வந்து பரிசல் மூலம் சென்று, ஹரிஹரனை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கொளத்தூர் போலீசார், ஹரிஹரன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுடன் காவிரியில் குளித்த மருத்துவக்கல்லூரி மாணவர், உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>