முக கவசம் அணியாத 200 பேர் மீது வழக்கு

சேந்தமங்கலம், ஏப்.15: நாமக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. எருமப்பட்டி வட்டார பகுதியில் மளிகை, காய்கறி கடைகள் மற்றும் ஹோட்டல், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு வருபவர்கள் மற்றும் டூவீலர்களில் செல்பவர்கள் முக கவசம் அணியாமல் சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, டூவீலர்களில் செல்பவர்கள் முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கும் படி நாமக்கல் எஸ்பி சக்தி கணேஷ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று எருமப்பட்டி பேரூராட்சி, கைகாட்டி, பொன்னேரி, துறையூர் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் எருமப்பட்டி போலீஸ் எஸ்எஸ்ஐகள் ஜவகர், கருணாநிதி தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 200 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலா ₹200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Related Stories: