பாலக்கோடு அருகே உணவு திருவிழா

தர்மபுரி, ஏப்.14: பாலக்கோடு அருகே பாரம்பரிய உணவு மற்றும் நவீன உணவுகளை வைத்து உணவுத் திருவிழா நடந்தது. பாலக்கோடு அருகே பாரம்பரிய உணவு மற்றும் நவீன உணவுகளை வைத்து உணவுத் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. பழைய சோறு பச்சை மிளகாய், சுய்யம், சுண்டல், அப்பம், கேழ்வரகு கழி, கேழ்வரகு அடை உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் வைக்கப்பட்டிருந்தது. நவீன உணவுகள் தோசை, இட்லி, பரோட்டா, பிஸ்கட், கேக், நூடுல்ஸ், கேசரி, சாக்லேட் உள்ளிட்டவைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தையும், பயன்கள் குறித்தும் ஓசூர் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் ஆகாஷ், இளையராஜா, நவீன்குமார், பாண்டித்துரை, பிரேம்குமார், சதீஷ், விக்னேஷ், கார்த்திக், லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: