தர்மபுரியில் தடுப்பூசி திருவிழா வாகன பிரசாரம்

தர்மபுரி, ஏப்.15: தர்மபுரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், கொரோனா தடுப்பூசி திருவிழா விழிப்புணர்வு வாகன பிரசாரம் நேற்று நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவ்வை நகர், சாலை விநாயகர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் குறித்தும், மேலும் கொரோனா பரவாமல் காப்பது குறித்தும், விழிப்புணர்வு மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. பல்வேறு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி துறைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சந்திரசேகரன், கள விழிப்புணர்வு அலுவலர் பிபின் எஸ்.நாத், உதவி அலுவலர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, பக்கவிளைவுகள் இல்லாதது. வரும் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடக்கிறது,’ என்றனர்.

Related Stories: