சாலையில் மயங்கி விழுந்தவரிடம் வெளிநாட்டு கரன்சி 40 லட்சம் அபேஸ்

சென்னை: அண்ணாநகரை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் சரவணன்(31) என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் தனது நிறுவனத்தில் இருந்து இந்திய மதிப்பில் 40 லட்சம் மதிப்புள்ள சவூதி ரியால் பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் செலுத்த பைக்கில் வந்து கொண்டிருந்தார். தி.நகர் தெற்கு போக் சாலையில் வரும்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் தனது நிறுவனத்தில் இருந்து கொண்டு வந்த ₹40 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை வைத்திருந்ததாகவும், பணம் வைத்திருந்த பை மட்டும் திடீரென மாயமானதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, நிதி நிறுவனத்தின் மேலாளர் சுதீஷ், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஊழியர் சரவணன் சாலையில் மயங்கி விழுந்த பகுதி மற்றும் ராயப்ேபட்டை அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், சரவணனை மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களிடமும் பணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: