செய்தி துளிகள்

ரத்த வாந்தி எடுத்து தூய்மை பணியாளர் பலி: கொருக்குப்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(52). மாநகராட்சி தூய்மை பணியாளர். கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல்  மது போதைக்கு அடிமையானார். நேற்று முன்தினம் இரவு திடீரென  சீனிவாசன் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக இறந்தார்.

கஞ்சா விற்ற 5 பேர் கைது: வியாசர்பாடி எம்.எம்.கார்டன் 3வது தெருவில் கஞ்சா விற்ற வியாசர்பாடி அந்தோணி(44), அப்பு(18), சுகுணா(53), சரளி(38), ஆதிலட்சுமி(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பெண் தற்கொலை: புழல் அடுத்த கதிர்வேடு மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி(52). இவரது மகன் கிருஷ்ணன்(30). நேற்று முன்தினம் மதியம் வீட்டில் கிருஷ்ணகுமாரி சமையல் எதுவும் செய்யவில்லை. இதனால் கிருஷ்ணன் திட்டியதால் மனமுடைந்த கிருஷ்ணகுமாரி நேற்று முன்தினம் வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தார்.

= புழல் புனித அந்தோணியார் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகுபிரபாகரன்(35). இவரது மனைவி சந்தியா(31). 2 மாத கர்ப்பிணி. குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தை வேண்டாமென கணவன் கூறியதால் நேற்று மாலை வீட்டின் அறையில் சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கால்வாயில் சிக்கிய மாடு மீட்பு: மணலி சின்ன மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு பசு மாடு மணலி எஸ்.ஆர்.எப் கம்பெனி ஆமுல்லைவாயல் பாலம் கால்வாயில் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடியது. தகவலின்பேரில்  தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பசுமாட்டை கயிறு கட்டி உயிரோடு மீட்டனர்.

வாலிபரை மிரட்டியவர் கைது: எண்ணூர் விவேக் நகரை சேர்ந்தவர் ரமேஷ்(33). நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் மாமியாரிடம் சண்டை போட்டபோது தடுக்க வந்த வீட்டின் உரிமையாளர் சஞ்சை(25) என்பவரை கத்தியை காட்டி மிரட்டி குத்த முயற்சித்தார். புகாரின்பேரில் எண்ணூர் போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

1 டன் குட்கா பறிமுதல்: பூந்தமல்லி அருகே நேற்று முன்தினம் மினி கன்டெய்னரில் கடத்திய 1 டன் எடையுள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக கவுதம்ராஜ்(32), ராமநாதனை(30) கைது செய்தனர்.

Related Stories:

>