பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆரணி, ஏப்.14: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், தர்மராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி, கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி(42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் செல்வி கோபித்துக்கொண்டு திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தர்மராஜா கோயில் தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டாராம். மனமுடைந்து காணப்பட்ட செல்வி நேற்று முன்தினம் தூக்குப்போட்டு கொண்டாராம். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வியின் தாயார் தரணி ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>