பெண்கள் பொங்கலிட்டு யுகாதி வழிபாடு சாமூண்டீஸ்வரி அம்மன் கோயிலில்

வேட்டவலம், ஏப்.14: வேட்டவலம் சாமூண்டீஸ்வரி அம்மன் கோயிலில் யுகாதி விழா ெபாங்கலிட்டு சிறப்பாக கொண்டப்பட்டது. வேட்டவலம் பெரியார் தெருவில் அமைந்துள்ள ராமலிங்க சாமூண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தில் பெண்கள் சமூக இடைவெளியுடன் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>