கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் தின விழாவில் மாணவர்களுக்கு பரிசு வட்டார கல்வி அலுவலர் வழங்கினார்

சேத்துப்பட்டு, ஏப்.14: சேத்துப்பட்டு அடுத்த கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் தின விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சேத்துப்பட்டு அடுத்த கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் தின விழா, பொது அறிவு, கலை நிகழ்ச்சி மற்றும் செயல் திறன் ஆகியவற்றில் இணைய வழியிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்று, பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார். ஆசிரியர் முரளி வரவேற்றார். இதில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் வேலு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர் செந்தில் முருகன், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி யுவராஜ், பள்ளியின் ஆசிரியர்கள் ஜெயராஜ், ஆனந்தி, விமலி, சத்யா மற்றும் கிராம பொதுமக்கள், பெற்றோர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பழனி நன்றி கூறினார்.

Related Stories: