கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன தணிக்கை

வேட்டவலம், ஏப்.14: கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்ட எல்லையான வேட்டவலத்தில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்ட எல்லையான வேட்டவலத்தில் இன்ஸ்பெக்டர் நிலவழகன் தலைமையில் எஸ்ஐ விஸ்வநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் மாவட்டத்திற்குள் வரும் கார், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை தீவிரமாக கண்காணித்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை எச்சரித்து இலவசமாக முகக்கவசம் வழங்கினர்.

Related Stories:

>