வேலூர் மாநகராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய 210 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு சேலம் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்

வேலூர், ஏப்.14: வேலூர் மாநகராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய 210 பேரின் ரத்த மாதிரிகள் ேசகரித்து சென்னை ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக மாநகர நல அலுவலர் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் மாநகராட்சி பகுதிகளிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது. எனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது என்று ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சத்துவாச்சாரி, வேலூர், காட்பாடி, ெதாரப்பாடி, சேண்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுழற்சி முறையில் மொத்தம் 210 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரத்த மாதிரிகள் சேலம் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனை முடிவில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய முடியும். மாநகராட்சி முழுவதும் ெமாத்தம் 210 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர நல அலுவலர் சித்ரசேனா கூறுகையில், ‘வேலூர்மாநகராட்சியில் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய சுழற்சி முறையில் 210 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்காக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் முன்பு 100 பேருக்கு ரத்த மாதிரி எடுத்ததில் 30 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. அதேபோல் தற்போது எடுத்த ரத்த மாதிரியில் 100ல் 60 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாக கருதப்படும். ஒருவாரத்தில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும்’ என்றார்.

Related Stories: