கொரோனா தடுப்பூசி திருவிழாவையொட்டி 45 வயது மேற்பட்டோரை வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம் சுகாதார பணியாளர்கள் களமிறங்கினர்

வேலூர், ஏப்.14: வேலூரில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரங்களை வீடு, வீடாக சேகரிக்கும் பணியில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 2வது கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் 45 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வைத்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுரை வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

இதையடுத்து, வேலூர் மாநகராட்சியில் உள்ள வீடுகளில் 45 வயது மேற்பட்டவர்கள் பட்டியல் சேகரிக்கும் பணியை நேற்று தொடங்கினர். மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் சுகாதார பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று, குடும்பத்தில் உள்ளவர்களில் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ேபாட்டு கொள்ளுவதற்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் அருகிலுள்ள கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து விவரங்கள் தெரிவித்து, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அதேபோல், அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

Related Stories: