நண்பனை கல்லால் தாக்கியவர் கைது

வேலூர், ஏப்.14: வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார்(24). இவர் திருநங்கை ஒருவருடன் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது. இதை அவரது நண்பரான சுகுமார் நேற்று முன்தினம் இரவு கிண்டல் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அஜீத்குமார் சுகுமாரை கற்களால் சரமாரி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சுகுமாரின் தந்தை அரிகிருஷ்ணன் வேலூர் வடக்கு போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து அஜீத்குமாரை கைது செய்தார்.

Related Stories:

>