×

வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தகர ஷீட் அமைத்து தெரு அடைப்பு

வேலூர், ஏப்.14: வேலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால் தெருவை அடைத்து தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக 2வது அலை பரவி வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதில் மாநகராட்சி பகுதியில் அதிகளவில் தொற்று இருந்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாநகாரட்சி 2வது மண்டலத்துக்கு உட்பட்ட காந்திரோடு அருகே வாணியர்பேட்டை, சர்கார் மண்டி தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 ேபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே ஒரு தெருவில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதி லாக்டவுன் பகுதியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்கார் மண்டி தெருவில் மாநகாரட்சி சார்பில் தகர ஷீட் அடித்து தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதி முழுவதும் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பல மாதங்களுக்கு பிறகு மாநகராட்சி சார்பில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Valor Municipality ,
× RELATED வேலூர் மாநகராட்சி 13 கோடி ஸ்மார்ட்...