திருப்பூரில் தனியார் மண்டபத்தில் 50 படுக்கைகள் தயார்

திருப்பூர், ஏப். 14: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாநகர் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள் மற்றும் சந்தைகளில் மாநகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் அதிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவசர காலத்தில் கொரோனா நோயாளிகளை கவனிக்கும் வகையில் திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநகர சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கைகயை மேற்கொண்டுள்ளனர். இதுபோல் அந்த மண்டபத்தில் தடுப்புகள் மற்றும் செவிலியர்கள் ஓய்வு எடுக்கும் வகையிலும் தகர மேற்கூரையுடன் தங்கும் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

Related Stories:

>