கொரோனா தடுப்பு விதிமீறல் வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

திருப்பூர், ஏப். 14: திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூரில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனையடுத்து மாநகராட்சி முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்களில் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் தடுப்பு நடவடிக்கைகளாக முகக் கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை பின்பற்றாதது உணவகங்களில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடாமல் இருந்தது ஆகியவற்றை கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கும் உடனடி அபராதம் விதித்தனர்.

Related Stories:

>