×

பிளம்ஸ், பீச்சீஸ் பழ சீசன் துவக்கம்

ஊட்டி, ஏப். 14: நீலகிரி மாவட்டத்தில் மிகவும் தாமதாமாக பிளம்ஸ் மற்றும் பீச்சீஸ் பழ சீசன் துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக, இங்கு பேரிக்காய், ஆரஞ்சு, பிளம்ஸ், பீச்சீஸ் போன்ற பழங்கள் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிலும், ஆண்டு தோறும் மார்ச் மாதம் மாதம் முதல் மே மாதம் வரை சுவை மிக்க பீச்சீஸ் மற்றும் பிளம்ஸ் பழங்கம் சீசன் ஆகும். இச்சமயங்களில் இந்த பழங்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அதிகளவு அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். கிலோ ஒன்று ரூ.50முதல் 80 வரை விற்பனை செய்யப்படும். சில சமயங்களில் பிளம்ஸ் பழங்கம் கிலோ ஒன்று ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படும். பொதுவாக இந்த இவ்விரு பழங்களும் மார்ச் மாதம் துவக்கம் முதல் விற்பனைக்கு வரும். ஆனால், இம்முறை மார்ச் மாதம் முழுக்க இவ்விரு பழ சீசனும் துவக்கமால் இருந்தது. பலரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், கடந்த மாதம் இவ்விரு பழங்குளும் விற்பனைக்கு குறைந்தளவே வந்தன. இந்நிலையில், தற்போது இவ்விரு பழ சீசனும் துவங்கியுள்ளது. தற்போது தான் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்துள்ளன. அதேபோல், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்