504 பேருக்கு கொரோனா

கோவை, ஏப். 14:  கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 600-க்கு மேல் இருந்தது. இந்நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது.

அதன்படி, நேற்று 504 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 319-ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால் 369 பேர் குணமடைந்துள்ளனர். இதனால்,  மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 99-ஆக உள்ளது. மேலும், கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் 4,520 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். கோவையில் நேற்று கொரோனா காரணமாக நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700-ஆக உள்ளது.

Related Stories:

>