9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை மெஸ் மாஸ்டர் போக்சோவில் கைது

பெ.நா.பாளையம். ஏப். 14:  கோவை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெஸ் மாஸ்டரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கோவை பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த பெண் தனது 9 வயது மகளை கவுண்டம்பாளையம் அடுத்த இடையர்பாளையம் பகுதியில் வசிக்கும் தனது தங்கை வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த சிறுமிக்கு தங்கையின் கணவர் பழனிவேலு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், சிறுமியை ஆடை இல்லாமல் செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். கணவரின் செல்போனில் இதை பார்த்த மனைவி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிவேலுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>