சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

கோவை, ஏப். 14: சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை குனியமுத்தூர் டாஸ்மாக் கடையில் மது குடித்து வந்த நண்பர்கள் 3 பேர் டாஸ்மாக் அருகே தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் அவர்களை வீட்டிற்கு செல்ல கூறினார். ஆனால் மது போதையில் இருந்த நபர்கள் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தையில் பேசினர். மேலும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் குனியமுத்தூர் போலீசில்  அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த கைமுசா பெரோஸ்கான் (30), முகமது ரபிக் (32), ராமன் (எ) ராசு (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தையில் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>