வரி விளம்பரங்கள் பால் வேன் கவிழ்ந்து முதியவர் பலி டிரைவர் படுகாயம்

துறையூர், ஏப். 14:துறையூர் விரிவாக்க பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சீனிவாசன்(79). எல்ஐசி ஏஜென்ட். இவரது பேரன் தொட்டியம் பகுதி எம். களத்தூரைச் சேர்ந்த கனகராஜ் மகன் கவுதமன் (29). இவர் துறையூரில் உள்ள தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான வேனில் டிரைவராக உள்ளார். இந்நிலையில், கவுதமன் வழக்கம்போல் நேற்று துறையூரிலிருந்து பெரம்பலூர் சென்று பால் இறக்கிவிட்டு மீண்டும் துறையூர் திரும்பினார். அப்போது தனது தாத்தா சீனிவாசனையும் வண்டியில் அழைத்து வந்தார்.

நாகலாபுரம் வனப்பகுதி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கவுதமன் பலத்த காயம் அடைந்தார். தகவலறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவுதமன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>