×

அதிமுக சார்பில் கபசுர குடிநீர்

சாயல்குடி, ஏப்.14:  முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மாஸ்க் வழங்கப்பட்டது. முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர் தர்மர் முன்னிலை வகித்தார், நகர செயலாளர் சங்கரபாண்டியன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர், மாஸ்க் இலவசமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து தர்பூசணி, இளநீர், மோர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வெங்கலகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார், இளைஞரணி செயலாளர் தூரி மாடசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Kapasura ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...