×

இருளில் மூழ்கிய வைகை மேம்பாலம் வழிப்பறியால் மக்கள் அச்சம்

பரமக்குடி, ஏப்.14:  பரமக்குடியில் இருந்து எமனேஸ்வரம் செல்லும் வைகை ஆற்று மேம்பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பரமக்குடி- எமனேஸ்வரம் பகுதியை இணைக்கும் வகையில் வைகை ஆற்றுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக சிவகங்கை மாவட்டம் மற்றும் திருச்சி,சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 8 வார்டு மக்கள் இதன் வழியாக செல்வதுடன், நயினார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமமக்களும் இப்பாலத்தை பயன்படுத்துகின்றனர்.

பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி உள்ளது. ஆனால் பாலத்தில் மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகளால், அப்பகுதியில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், வழிப்பறி கொள்ளையர்கள் அந்த பகுதியில் செல்லும் முதியவர்களிடம் பணத்தையும் நகையையும் பறித்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது. போலீசார் பாலத்தில் அமரும் சமூக விரோதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...