×

கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம், ஏப். 14:தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு, சேலத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தெலுங்கு வருடப்பிறப்பு எனும் யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று, தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் யுகாதி பண்டிகையை கொண்டாடினர். வீடுகளில் கௌரி விரதம் கடைபிடித்த பெண்கள், பஞ்சாங்கத்தை வைத்தும், கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, இனிப்பு உள்ளிட்ட அறுசுவை பட்சனங்களை சுவாமிக்கு படைத்தும் வழிபட்டனர்.

மேலும், சேலத்தில் உள்ள முக்கிய கோயில்களில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடும் நடந்தது. அதன்படி, சேலம் டவுன் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோயிலுக்கு வெளியே இருந்து அம்மனை வழிபட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல், அம்மாப்பேட்டை சித்தேஸ்வரா பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு காளியம்மனுக்கு திருமாங்கல்யங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், கோட்டை அழகிரிநாத பெருமாள் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags :
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்