×

ஊராட்சிக்கோட்டை கதவணையில் பரமாரமிப்பு பணிகள் துவங்கியது


இடைப்பாடி, ஏப்.14: இடைப்பாடி அடுத்த ஊராட்சிக்கோட்டை நீர்மின் உற்பத்தி கதவணையில்  வருடாந்திர பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளது. இதனால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி மற்றும் ஊராட்சிக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள கதவணைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும். இந்த கதவணைகளில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் 15 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பரமாமரிப்பு பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக தேவூர் ஊராட்சிக்கோட்டை கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நீர்த்தேக்க பகுதிகளான வேலாத்தா கோயில்,  ராமக்கூடல், புளியம்பட்டி பரிசல் துறை, புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவிரியில் தண்ணீர் வடிந்து பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.

Tags : Ooratchikottai gate ,
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை