ஓமலூர் வட்டாரத்தில் வாழை அறுவடை துவக்கம்

ஓமலூர், ஏப்.14: சித்திரை திருநாளையொட்டி ஓமலூர் வட்டாரத்தில் வாழை அறுவடை துவங்கியுள்ளது. மார்க்கெட்டில் வாழைக்கு  நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், சித்திரை திருநாளை எதிர்நோக்கி விவசாயிகள் பூவன் வாழை சாகுபடி செய்திருந்தனர். கடந்த ஒரு வாரமாக வாழைதார்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வாழை இலை தேவை அதிகரித்து, விலையும் உச்சத்தில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்க்கெட்டில் கடந்தவாரம் ₹550க்கு விற்பனையான பூவன் வாழைத்தார் நேற்று ₹750க்கு விற்பனையானது.

அதே நேரத்தில் விவசாயிகளிடம் தார் ஒன்றை ₹ 300க்கு விவசாயிகள் மொத்தமாக கொள்முதல் செய்தனர். மேலும், 100 இலை கொண்ட கட்டு ₹800 முதல் ₹1,300 வரையிலும் விற்பனையானது. நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும்  சில்லறை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: