தமிழ்வருட பிறப்பையொட்டி பழங்களின் விலை உயர்வு

அரூர், ஏப்.14: சித்திரை முதல் நாள் தமிழ்வருட பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஐயப்பன் கோயில்களில் கனி பார்க்கும் விழாவும் நடத்தப்படும். சிலர் வீடுகளிலும் பழங்களை வைத்து பூஜை செய்வார்கள். தொடர் விசேஷங்களால் பழங்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிலோ ஆப்பிள் ₹160, திராட்சை ₹100, ஆரஞ்சு ₹140, சாத்துகுடி ₹110, மாதுளை ₹160, அன்னாசி பழம் ₹60என அனைத்து பழங்களின் விலையும் 20 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. விலை உயர்வு என்றாலும் தேவை காரணமாக பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

Related Stories:

>