கொரோனாவுக்கு எஸ்ஐ பலி போலீசாருக்கான ரோல்கால் நிறுத்தம்

தர்மபுரி, ஏப்.14: தர்மபுரியில், கொரோனாவுக்கு போக்குவரத்து போலீஸ் எஸ்எஸ்ஐ பலியானதையொட்டி, போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு ரோல்கால் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷனுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 4 மகளிர் காவல்நிலையம் உள்ளிட்ட 25 போலீஸ் ஸ்டேஷன் உள்ளன. 1200 போலீசார் பணியாற்றுகின்றனர். இந்த போலீசார் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ், எஸ்எஸ்ஐ கொரோனாவுக்கு பலியானார். இதைத்தொடர்ந்து தர்மபுரி போக்குவரத்து பிரிவு போலீஸ் ஸ்டேஷன், புறக்காவல்நிலையத்திற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அனைத்து போலீசாரும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். போக்குவரத்து போலீஸ் எஸ்எஸ்ஐ இறப்பையொட்டி நேற்று முதல் ரோல்கால் நிறுத்தப்பட்டது. அவர்கள் பணியாற்றும் இடத்திலேயே பணியாற்ற, எஸ்பி பிரவேஸ்குமார் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். காவல்துறையில் கொரோனா பலியால் தற்போது நாங்களும் தனிமைப்படுத்திக்கொண்டு தினசரி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ரோல்கால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories:

>