கரூர் வெள்ளியணை சாலை பகுதியில் தடுப்புச்சுவர் வாகனஓட்டிகள் எதிர்பார்ப்பு

கரூர், ஏப்.14: கரூர் வெள்ளியணை சாலையின் அனைத்து பகுதிகளிலும் தடுப்புச் சுவர் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் வெள்ளியணை வெங்ககல்பட்டி இடையே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. விரிவாக்கம் செய்த சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் வைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த பணி ஆங்காங்கே மட்டும் நடைபெற்று வருவதால் புதிதாக இந்த சாலையில் வரும் வாகனஓட்டிகள் பீதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அனைத்து பகுதிகளிலும் தடுப்புச் சுவர் அமைத்து, வாகன ஓட்டிகள் எளிதாக சாலையை கடந்து செல்லும் வகையில் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>