சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெறும் பிளஸ் 2 வகுப்புகள்

ஊட்டி,ஏப்.13:  ஊட்டியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 217 பள்ளிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட்டு முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்த பின் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வரும் 16ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் பள்ளிகளில் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மே 3ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2 தேர்வு ஒத்தி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்தனர்.

Related Stories:

>