×

கொரோனா விதிமுறைகள் குறித்து பஸ் ஸ்டாண்டில் கமிஷனர் ஆய்வு

ஈரோடு, ஏப். 13:  கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கமிஷனர் இளங்கோவன் நேற்று ஆய்வு செய்தார். ஈரோடு மாநகராட்சி சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாஸ்க் அணியாமல் சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பது, 2வது முறையாக விதிமீறல்களில் ஈடுபட்டால், கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் அதிகாரிகளுடன் ஈரோடு பஸ் ஸ்டாண்டு சென்று ஆய்வு செய்தார். அப்போது, மாஸ்க் அணியாமல் சென்ற பயணிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல பஸ்களில் பயணிகள் நின்று கொண்டு செல்கிறார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டது.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை