சமூக இடைவெளியின்றி சோதனை ஓட்டம்

திருச்சி, ஏப்.13: திருச்சி மாவட்ட ஹயர் கூட்ஸ் அமைப்பாளர்கள் நலச்சங்கம் தலைவர் அன்வர்பாஷா, செயலாளர் ராஜா, பொருளாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பந்தல், வாடகை பாத்திரக்கடை, ஒலி மற்றும் ஒளி போட்டோ, வீடியோ, சமையல் கலைஞர்கள், மேடை இசை கலைஞர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் திருச்சி மாவட்டத்தில் இத்தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறோம். கொரோனா காலத்தில் அரசு எங்களை மட்டும் மறந்து விட்டது.

தற்போது நடைபெற்ற தேர்தலிலும் ஒரு சில அரசு ஒப்பந்ததாரர்களை தவிர மற்ற அனைவரும் வேலைாய்ப்பின்றி தவிக்கிறோம். தற்போதும் எங்கள் தொழிலை தவிர மற்ற அனைவருக்கும் அரசு விலக்கு அளித்துள்ளது. எங்களுக்கு தனிவாரியம் அமைத்து எங்கள் தொழிலையும், குடும்பங்களையும் காக்க வேண்டும். திருமண மண்டபத்தில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் அனுமதி வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் இந்த தொழிலை நம்பி வாழும் பல லட்சம் குடும்பங்களை காத்து அரசு விழாக்களிலும் கட்சி கூட்டங்களிலும், ஒலி மற்றும் ஒளி அமைக்கும் எங்களின் வாழ்விலும் ஒளி ஏற்ற வேண்டும். அரசு விதிகளுக்குட்பட்டு இயங்கும் வகையில் திருமணம், கோயில் விழாக்கள் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு தொழில் செய்ய எங்களை பணித்திட வேண்டும்’ என அநத மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: