கலசபாக்கம் ஒன்றியத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ₹200 அபராதம்

கலசபாக்கம், ஏப்.13: கலசபாக்கம் ஒன்றியத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ₹200 அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது மேலும் பொதுஇடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலசபாக்கம் ஒன்றியத்தில் கலசபாக்கம், பில்லூர், தென்பள்ளிப்பட்டு, மோட்டூர், பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிடிஓ மகாதேவன், விஜயலட்சுமி மற்றும் போலீசார் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி ₹200 அபராதம் விதித்தனர். மேலும், கலசபாக்கம் பஜார் வீதியில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி ₹200 அபராதம் விதித்து முகக்கவசங்களை வழங்கி, இனிவரும் காலங்களில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என அறிவுரை வழங்கினர். இதில் ஊராட்சித் தலைவர் பவுனு வெள்ளிக் கண்ணன், மண்டல துணை பிடிஓ சுதா, ஊராட்சி செயலாளர் தனபால் மற்றும் பலர் உடன் இருந்தனர். கலசபாக்கம் பஜார் வீதியில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை பிடிஓ மகாதேவன் விஜயலட்சுமி ஆகியோர் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து முகக்கவசங்களை வழங்கினர்.

Related Stories: