வர்த்தக நிறுவனங்களில் சானிடைசர், காய்ச்சல் கண்டறியும் கருவி கட்டாயம்

கரூர், ஏப். 13: வர்த்தக நிறுவனங்களில் சானிடைசர் மற்றும் கடைக்கு வரும் வாடிக்கயைாளர்களை பரிசோதிக்க காய்ச்சல் கண்டறியும் கருவி வைத்திருக்க வேண்டும் என்று நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆலோசனை வழங்கினார். கரூர் நகர போக்குவரத்து துறை சார்பில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூரில் உள்ள உணவக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கரூர் நகரப்பகுதிகளை சேர்ந்த அனைத்து வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கரூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் கலந்து கொண்டு பேசுகையில், வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதையும், இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். கடைகளின் முன்பு, சானிடைசர், காய்ச்சல் உள்ளதா? என்பதை கண்டறியும் கருவி போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள துணையாக வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை ஆலோசனை வழங்கினார்.

Related Stories: