கரூர் பகுதியில் திடீர் மழையால் வெயில் தாக்கம் குறைந்தது

கரூர், ஏப். 13: கரூரில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல, கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்யத் துவங்கியது.

அரை மணி நேரத்துக்கும் மேலாக கரூர் மாவட்டம் முழுதும் குறிப்பாக கரூர் நகரப்பகுதியில் பெய்த இந்த மழையால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். திடீர் மழையின் காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் மக்கள் சற்றே நிம்மதியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>