பொதுமக்கள் எதிர்பார்ப்புகோயில்களுக்கு தானமாக வரும் பசுக்களை பூசாரிகளுக்கு வழங்க கோரிக்கை

கரூர், ஏப். 13: கோயில்களுக்கு தானமாக வரும் பசுமாடுகளை பூசாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பூசாரிகள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கோயில்களில் பூசாரிகளாக பணியாற்றி வருகிறோம். கோயில்களுக்கு தானமாக வரும் பசுமாடுகளை எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு வழங்கும்பட்சத்தில், பசு மாட்டினை நன்கு பராமரித்து, பணியாற்றும் கோயிலுக்கு தேவையான பால், விபூதி, மற்றும் கோமியம் போன்றவற்றை பூஜைக்கு பயன்படுத்துவேன்.வேறு வகையில் பசுமாட்டினை பயன்படுத்த மாட்டேன். அறநிலையத்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பேன் என்று தனித்தனியாக பூசாரிகள் வழங்கிய மனுக்களில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>