×

கொண்டித்தோப்பு பகுதியில் நான்கு தெருக்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக அறிவிப்பு

தண்டையார்பேட்டை: கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதுவரை தமிழகத்தில் 15767 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் 1444 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேபோல் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த சமூக இடைவெளி கடைப்பிடிக்கவேண்டும், முககவசம் அணிய வேண்டும், கை கழுவ வேண்டும் என சுகாதார துறை, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி ராயபுரம் 5வது மண்டலத்திற்கு உட்பட்ட கொண்டித்தோப்பு ரத்தினம் தெருவில் 12 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் நம்மாழ்வார் தெருவில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொண்டால் தெருவில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணப்பா குளம் தெருவில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த தெருக்கள் ஹாட்ஸ்பாட் ஆக அறிவித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் மாப்பிள்ளை துறை மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர் இஸ்மாயில் உள்ளிட்டோர் அந்த தெருக்களில் மூடி சீல் வைத்தனர். மேலும் மருந்து அடித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்துள்ளனர். முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், கைகளை நன்றாக கழுவ வேண்டும் உள்ளிட்டவை அறிவித்து நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. கொண்டித்தோப்பு பகுதியில் நான்கு தெருக்கள் மூடி சீல் வைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Tags : Kondithoppu ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில்...