மாவட்டத்தில் முள்ளங்கி விலை வீழ்ச்சி; கிலோ ₹1க்கு விற்பனை

கிருஷ்ணகிரி, ஏப்.13: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முள்ளங்கி கிலோ ₹1க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, சூளகிரி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி,  உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர் பரவலாக முள்ளங்கி பயிர் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். விதை ஊன்றிய நாளில் இருந்து 2 மாதத்தில் முள்ளங்கியை அறுவடை செய்ய முடியும். குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர் என்பதால், விவசாயிகளில் தங்கள் வயலில் சிறு பரப்பளவிலாவது முள்ளங்கியை நடவு செய்வர்.

கிருஷ்ணகிரி அருகிலுள்ள பூசாரிப்பட்டி கிராமத்தில், ஆண்டு முழுக்க முள்ளங்கி சாகுபடி செய்யும் விவசாயிகளும் உள்ளனர். 2 மாதமான முள்ளங்கி பயிரிட ஏக்கருக்கு ₹20 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது முள்ளங்கி அறுவடை சீசன் என்பதால் வரத்து அதிகரித்துள்ளது. மொத்த விலையில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ ₹1 முதல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அறுவடை சீசன் என்பதால், மொத்த வியாபாரிகள் நிலத்தில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். கிலோ முள்ளங்கி 1 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே, முள்ளங்கிக்கு என குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயித்து, அதை அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: