ஓசூர் உழவர்சந்தையில் மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்

ஓசூர், ஏப்.13: ஓசூர் உழவர் சந்தையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஓசூர் உழவர்சந்தையில் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், துப்புரவு ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர், நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாஸ்க் அணியாமல் இருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தலா ₹200 அபராதம் விதித்தனர். அப்போது, பொது இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். பின்னர், பஸ் ஸ்டாண்ட், கடை வீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சுகாதார பணியாளர்கள், பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Related Stories: