காரிமங்கலம் அருகே கொரோனா தொற்று பாதித்த கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு

காரிமங்கலம், ஏப்.13: காரிமங்கலம் அருகே கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளான கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பைசுஅள்ளி ஊராட்சி மாட்லாம்பட்டி பகுதியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். மேலும், 43பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டு, பொது மக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கொரோனா கண்காணிப்பாளர் நீரஜ் மிட்டல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாட்லாம்பட்டி பேருந்து நிறுத்தம் வரை நடந்து சென்று, தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, பல்வேறு துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கலெக்டர் கார்த்திகா சப் கலெக்டர் பிரதாப், டிஆர்ஓ ராமமூர்த்தி, பஞ்சாயத்து உதவி இயக்குனர் சீனிவாச சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Related Stories: