திமுக சார்பில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல்: மாவட்ட பொறுப்பாளர் திறந்து வைத்தார்

செய்யாறு, ஏப்.12: செய்யாறில் 3 இடங்களில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் நேற்று திறந்து வைத்தார். செய்யாறு நகரில் மார்க்கெட், பஸ் ஸ்டாண்டு, ஆரணி கூட்டு ரோடு உள்ளிட்ட 3 இடங்களில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர் மோர், இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>