×

போளூர் அரசு மருத்துவமனையில் 1,333 பேருக்கு கொரோனா தடுப்பூசி

போளூர், ஏப்.12: போளூர் அரசு மருத்துவமனையில் நேற்று வரை 1,333 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. போளூர் நகரில் 60 வயது மேற்பட்டவர்கள், 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. அதன்படி, போளூர் அரசு மருத்துவமனையில் நேற்று வரை முதல் தவணை தடுப்பூசி 1,333 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, போளூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ச.சவுத்ரி கூறியதாவது: இதுவரை கொரோனா 2வது தடுப்பூசி 219 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், முதல்தவணை தடுப்பூசி 1,333 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. போளூர் அரசு மருத்துமனையை பொருத்தவரை தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக எதிர்பார்த்த இலக்கை அடைவோம் என தெரிவித்தனர்.

Tags : Polur Government Hospital ,
× RELATED ஏழை முதியவருக்கு மூட்டு மாற்று அறுவை...