×

கண்ணமங்கலம் பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

கண்ணமங்கலம், ஏப்.12: கொரோனா வைரச் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆலோசனையின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார், தலைமைக் காவலர்கள் ஏழுமலை, நவீன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வேல்முருகன், வெங்கடேசன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, பஸ், கார், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் கொரோனா தடுப்பு விதிகளின்படி முகக்கவசம் அணியாமல் வேன், ஆட்டோ மற்றும் பைக்கில் பயணிப்பவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ₹200, சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களிடம் ₹500 என அபராதம் வசூலித்தனர். கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் அருகே முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்த போலீசார்.

Tags : Kannamangalam ,
× RELATED டிரோன் கேமரா உதவியுடன் போலீசார் சாராய வேட்டை