×

திமுக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்

அவிநாசி, ஏப்.12:  அவிநாசி நகர திமுக சார்பில் அவிநாசி தாலுகா அலுவலகம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் நேற்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திமுக ஒன்றிய பொறுப்பாளர் சிவப்பிரகாஷ் முன்னிலை வகித்தார்.  ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் கபசுர குடிநீர் வழங்கி  துவக்கி வைத்தார். இதில், நகர திமுக அவைத்தலைவர் ராயப்பா, துணை செயலாளர்கள் கார்த்திகேயன், ஆறுமுகம், பொருளாளர் மோகனசுந்தரம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செல்வரங்கம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விவேக், மாவட்ட பிரதிநிதி துரைசாமி, ஆதி தமிழர் பேரவை மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், மாநில துணை பொது செயலாளர் விடுதலைசெல்வன் ஆகியோர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுறுத்தினர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில், சமூக இடைவெளியை  பின்பற்றுதல் குறித்து பொது மக்களிடம்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.

Tags : Kapusura ,DMK ,
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...