பராமரிப்பின்றி காட்சியளிக்கும் நம்ம டாய்லெட் கழிப்பிடங்கள்

ஊட்டி,ஏப்.12:  நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஊட்டி நகரம் மற்றும் வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் அனைத்தும் நகராட்சி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களின் அவசர தேவைகளுக்காக ஊட்டி நகரம் மற்றும் வார்டு பகுதிகளில் நம்ம டாய்லெட் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளன. இவை தனியார் மூலம் பராமரிக்கப்படுகிறது. பெரும்பாலான கழிப்பிடங்கள் போதிய பராமரிப்பின்றி அசுத்தமாக காட்சியளிக்கின்றன. எனவே நகரில் உள்ள கழிப்பிடங்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: