ஊட்டி மார்க்கெட் முன்பாக நடைபாதையில் அலங்கார தடுப்புகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி,ஏப்.12: ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலை காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்களை வாங்க ஊட்டி மார்க்கெட்டிற்கு வருகின்றனர். இவர்கள் மணி கூண்டு முதல் காபி அவுஸ் வரையுள்ள நடைபாதை வழியாகவே மார்க்கெட்டிற்கு செல்கின்றனர். இந்நிலையில், சாலையோரத்தில் கடந்த ஓராண்டிற்கு முன் நடைபாதை அமைக்கப்பட்டது. அப்போது, அங்கு ஏற்கனவே இருந்து இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் அகற்றப்பட்டது. மீண்டும் தடுப்புகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்படவில்லை. இதனால், பொதுமக்களுக்கு விபத்து அபாயம் தொடர்கிறது.

எனவே, கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரத்தில் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார இரும்பு தடுப்புகள் போன்று மார்க்கெட் நடைபாதையில் காபி அவுஸ் முதல் மாரியம்மன் கோயில் வரையிலும், அதே போல், கமர்சியல் சாலையில் காபி அவுஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை நடைபாதைகளில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: