நகை கேட்டு கணவர் டார்ச்சர் மனைவி தற்கொலை முயற்சி

கோவை, ஏப்.12: கோவை உடையாம்பாளையம் அருகே உள்ள ரங்கநாயகி நகர் பகுதியை சேர்ந்தவர் வீரஜோதி (24). இவருக்கு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த குணசேகரன் (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது  வீர ஜோதியின் பெற்றோர் 25 பவுன் நகை போடுவதாக உறுதியளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், 15 பவுன் தங்க நகை போட்டு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், மேலும் 10 பவுன் நகை கேட்டு குணசேகரன் தனது மனைவியை அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வீரஜோதி, தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

வீரஜோதியின் தங்கைக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்த நிலையில் குணசேகரன் 10 பவுன் நகை தனக்கு உடனடியாக வழங்க வேண்டும் என டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீர ஜோதி, சாணிபவுடர் கரைத்து குடித்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>