கொடிசியாவில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை, ஏப்.12:  கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் கோவை  கொடிசியாவில் நேற்று நடந்தது.  இரண்டு  மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணி புரிந்து வரும் தொழிலாளர்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நேற்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடந்த சிறப்பு முகாமில் 500க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தொடர்ந்து வரும் 15-ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம் செயல்படும் என கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>