×

திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்கள் இன்று குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் பொன்மலை ஜி.கார்னரில் மின்விளக்கு அமைக்கும் பணி கொரோனா 2வது அலை பரவலை தடுக்க மாநகராட்சி பகுதிகளில் 2 நாள் காய்ச்சல் பரிசோதனை முகாம்

திருச்சி, ஏப்.12: திருச்சி மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் இரண்டு நாட்கள் நடக்கிறது. இது குறித்து ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அதன்படி இன்று (12ம் தேதி) காலை 20வது வார்டு சந்தானபுரம் சர்ச், வரகனேரி, 46வது வார்டு ஆர்.எம்.எஸ் காலனி, 6வது வார்டு பாண்டமங்கலம், 52வது வார்டு அம்மையப்பா நகர், 49வது வார்டு அண்டகொண்டான், 6வது வார்டு மேலகொண்டயம்பேட்டை, 1வது வார்டு மேல சித்திர தெரு, 37வது வார்டு முஸ்லிம் தெரு, 33வது வார்டு எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டபுரம், 8வது வார்டு பூசாரி தெரு, 21வது வார்டு வரகனேரி முதல் மற்றும் 2வது தெரு, 30வது வார்டு தங்கேஸ்வரி நகர், 40வது வார்டு கொல்லாங்குளம், 57வது வார்டு வாத்துக்கார தெரு, 62வது வார்டு பாரி நகர், 18வது வார்டு மன்னார்பிள்ளை தெரு, 63வது வார்டு கோகுல் நகர் ஆகிய இடங்களில் காலை நேரங்களில் நடக்கிறது.

தொடர்ந்து இன்று மாலையில் 47வது வார்டு சவேரியர் கோயில் தெரு, 6வமு வார்டு பூசாரி தெரு, 40வது வார்டு ஸ்டாலின் நகர், 18வது வார்டு முகமது அலி ஜின்னா தெரு, 63வது வார்டு கலைவாணர் நகர் ஆகிய இடங்களில் காய்ச்சல் முகாம் நடக்கிறது. இதே போல் நாளை (13ம் தேதி) காலை 17வது வார்டு சமஸ்பிரான் தெருவில் காய்ச்சல் முகாம் நடக்கிறது. தொடர்ந்து மாலையில் 25வது வார்டு கீழப்புதூர், 22வது வார்டு கீழபடையாச்சி அங்கன்வாடி மையம், 46வது வார்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், 60வது வார்டு மேட்டுத்தெரு அங்கன்வாடி மையம், 19வது வார்டு குப்பான்குளம், 5வது வார்டு புஸ்பாக் நகர், 3வது வார்டு நரியன் தெரு, 35வது வார்டு ஹைவேஸ் காலனி, 34வது வார்டு சர்க்யூட்ஹவுஸ் ரோடு, டிவிஎஸ் டோல்கேட், 9வது வார்டு வென்னீஸ் தெரு, 14வது வார்டு கமலாநேரு நகர், 30வது வார்டு நாகம்மை வீதி படிப்பகம், 41வது வார்டு அருணாச்சல நகர், 57வது வார்டு சாலை ரோடு, 29வது வார்டு ராஜப்பா நகர், 7வது வார்டு சாயக்கார தெரு, 64வது வார்டு மலைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் அதில் கேட்டுக்கொண்டார்.

Tags : Trichy ,Ponmalai G.Corner ,Corona ,
× RELATED தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி இன்று துவக்கம்?